பகீர் சம்பவம்.. 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.!! பலாதக்காரம் செய்து படுகொலை.!!
சென்னையில் 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 32 வயது இளைஞரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி
சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பலாத்காரம் செய்து கொலை
மூதாட்டியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் இறைச்சி கடையில் வேலை பார்க்கும் 32 வயது இளைஞரான விக்னேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார் விக்னேஷ்.
இதையும் படிங்க: "காசு வாங்குனேல கூட்டிட்டு வா.." புரோக்கரிடம் வக்கீல் ஆபாச பேச்சு.!! இளம் பெண் பரபரப்பு புகார்.!!
மதுவில் ஜூஸ் கலந்து மூதாட்டி பலாத்காரம்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த விக்னேஷ், மூதாட்டி தான் வேலை பார்க்கும் இறைச்சி கடைக்கு பக்கத்தில் தினமும் உறங்கியதாக தெரிவிருக்கிறார். இதனைத் தொடர்ந்து கவனித்து வந்த விக்னேஷ் சம்பவம் நடந்த தினத்தன்று மூதாட்டிக்கு மதுவில் ஜூஸ் கலந்து கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மூதாட்டியை கழுத்தறுத்து படுகொலை செய்ததையும் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: மதுரை: மனைவிக்கு வளைகாப்பு நடத்திவிட்டு கணவர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்.!