கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
திருச்சியில் பயங்கரம்.!! 94 வயது மூதாட்டி கொடூர கொலை.!! பேரன் தப்பியோட்டம்.!!
திருச்சி மாவட்டத்தில் 94 வயது மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மூதாட்டியின் பேரனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
94 வயது மூதாட்டி
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள செங்காடுபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி(94). இவரது மகன் இறந்துவிட்ட நிலையில் மருமகள் பானுமதி(70) மற்றும் பேரன் முரளிராஜா(43) ஆகியோருடன் வசித்து வந்தார். மேலும் இவரது பேரன் முரளிராஜா வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்திருக்கிறார். இது தொடர்பாக குடும்பத்தில் பிரச்சனை நிலவி வந்திருக்கிறது.
இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று முரளி ராஜா தனது தாயிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டு பிரச்சனை செய்துள்ளார். அப்போது பாட்டி நாகலட்சுமி, முரளி ராஜாவை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முரளி ராஜா வீட்டிலிருந்த இரும்பு கம்பியால் நாகலட்சுமி தலையில் கடுமையாக தாக்கினார். இந்த கொடூர தாக்குதலில் சுருண்டு விழுந்த நாகலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து முரளி ராஜா அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதையும் படிங்க: காலாவதியான செய்தியாளர் ஐ.டி கார்டுடன் மசாஜ் சென்டரில் அடாவடி; இளைஞர் கும்பலை வறுத்தெடுத்த ஒரிஜினல் செய்தியாளர்கள்..!
காவல்துறை விசாரணை
இந்தக் கொடூர சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பானுமதி இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட நாகலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து தப்பியோடிய முரளி ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு செய்த கணவன்... சுத்தியலால் மண்டையை பிளந்த மனைவி.!! அதிர்ச்சி சம்பவம்.!!