குடிபோதையில் தகராறு செய்த கணவன்... சுத்தியலால் மண்டையை பிளந்த மனைவி.!! அதிர்ச்சி சம்பவம்.!!
திருவள்ளூர் மாவட்டத்தில் மனைவி, கணவனை சுத்தியலால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஆட்டோ டிரைவர்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருணாகரன். இவருக்கு திருமணமாகி சரஸ்வதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். மேலும் கருணாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக நாளடைவில் அதிகமான மது குடித்து அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்திருக்கிறார் கருணாகரன்.
சுத்தியலால் மண்டை உடைப்பு
கருணாகரன் தினமும் மது குடித்து விட்டு வருவதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்திருக்கிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வழக்கம் போல் மது குடித்து விட்டு வந்த கருணாகரன் மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி சரஸ்வதி சுத்தியலால் கருணாகரன் மண்டையில் கடுமையாக தாக்கி இருக்கிறார். இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கருணாகரன் வலியால் அலறி துடித்துள்ளார்.
இதையும் படிங்க: மிரட்டி கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமி.!! 45 வயது நபர் போக்சோவில் கைது.!!
காவல்துறை விசாரணை
கருணாகரனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அவரது மனைவி சரஸ்வதியை விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வினையில் முடிந்த பள்ளி பருவ காதல்... பிளஸ் 2 மாணவி கர்ப்பம்.!! 17 வயது மாணவன் கைது.!!