கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"தாத்தா சாக்லேட் வாங்கி தரேன்.." 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! பெண் உட்பட இருவர் கைது.!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாக்லேட் தருவதாக கூறி 13 வயது சிறுமி பாலியல் தொல்லை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 55 வயது நபர் மற்றும் பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
7-ம் வகுப்பு மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 13 வயதான இவரது மகள் ஆரணியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் அந்த சிறுமி காஜிவாடை என்ற இடத்திலிருந்து பள்ளிக்கு வேன் மூலம் சென்று வந்திருக்கிறார்.
சாக்லேட் தருவதாக கூறி பாலியல் தொல்லை
இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமி பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் திரும்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறுமி தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் மண்ணெண்ணெய் கடை நடத்தி வரும் ஜனார்த்தனன்(55) என்பவரது வீட்டில் பணிபுரியும் ராஜேஸ்வரி என்ற பெண் சிறுமியை அழைத்து ஜனார்த்தனன் கடைக்குச் சென்றால் அவர் சாக்லேட் மற்றும் பிஸ்கட் தருவார் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். இதனை நம்பி சிறுமியும் அவரது கடைக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்ற ஜனார்த்தனன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக சிறுமி கதறி அழுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: சிக்கிய தலை.!! இரண்டாவது மனைவி கொடூர கொலை.!! கணவன், மாமியார் கைது.!!
போக்சோ வழக்கு
குழந்தையின் அழுகுரல் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கடைக்குள் சென்று பார்த்த போது சிறுமி பாலியல் தொல்லை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்ட பொதுமக்கள் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அவர்களது புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜனார்த்தனன் மற்றும் அவருக்கு உதவிய ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுடன் உல்லாசம்; ஆசைக்கு இணங்காததால் தனிமை வீடியோ லீக்.. தென்காசி இளைஞருக்கு காப்பு.!