மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!
கண்ணை மறைத்த காமம்... கொலையில் முடிந்த கள்ளக்காதல்.!! எமனாக மாறிய நண்பன்.!!
நண்பனின் மனைவியுடன் உல்லாசமாக இருந்து வந்தவர் கள்ளக்காதலுக்காக நண்பனையே தீர்த்து கட்டிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன். 26 வயதான இவர் மீது கொலை முயற்சி திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவர் தன் மீதுள்ள வழக்கு தொடர்பாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது புழல் சிறையில் உள்ள மீஞ்சூரை சேர்ந்த விஷ்ணு என்பவருடன் லட்சுமணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்களது நட்பு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் தொடர்ந்தது.
இந்நிலையில் விஷ்ணு லட்சுமணன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததால் விஷ்ணுவிற்கும் லட்சுமணனின் மனைவி ரம்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ள காதலாக மாறி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து விஷ்ணு மற்றும் ரம்யா அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது லட்சுமணனுக்கு தெரிய வரவே அவர் விஷ்ணுவை கண்டித்துள்ளார்.
இதையும் படிங்க: இயற்கை உபாதைக்கு சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்.!! 25 வயது வாலிபரின் வெறி செயல்.!!
இந்நிலையில் லட்சுமணன் விஷ்ணுவுடன் சேர்ந்து தோட்டக்காடு என்ற இடத்தில் வைத்து நண்பர்களுடன் மது அருந்தி உள்ளனர். அப்போது லட்சுமணன் விஷ்ணுவிடம் தன் மனைவியுடன் தொடர்பை விட்டுவிடுமாறு கூறி பிரச்சனை செய்திருக்கிறார். அப்போது விஷ்ணு மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து லட்சுமணனை கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் . இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய விஷ்ணு மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
இதையும் படிங்க: கொடூரம்... மின்வாரிய ஊழியர் படுகொலை.!! தாயுடன் சேர்ந்து 20 வயது இளைஞன் வெறி செயல்.!!