எஜமான் படத்தை பார்த்து AVM ஸ்டூடியோவுக்கு மணமகன் கேட்டு கடிதம் எழுதிய பெண்... கடிதத்தை வெளியிட்ட ஏ.வி.எம் நிறுவனம்.!



A woman wrote a letter to AVM Studios after watching Ejaman

நடிகர் ரஜினிகாந்த், மீனா, கவுண்டமணி, செந்தில், நம்பியார், மனோரமா உட்பட பலரின் நடிப்பில் அட்டகாசமாக கடந்த 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் எஜமான். இந்த படத்தில் வானவராயன் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.

tamil cinema

படம் வெளியாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஏ.வி.எம் ஸ்டுடியோ நிறுவனம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கடிதத்தில் ரஜினி ரசிகை ஒருவர் எஜமான் படம் பார்த்து, வானவராயன் கதாபாத்திரத்தை போல மணமகன் கேட்டுள்ளார். 

கடிதத்தில், "வணக்கம் சார். நான் செல்வி திலகவதி எழுதுகிறேன். எஜமான் வானவராயன் போல ஆண் இருந்தால் சொல்லுங்கள். உடனே கழுத்தை நீட்டுகிறேன். உடனே சொல்லுங்கள். நான் விரைவில் திருமணம் செய்து, கணவருடன் பார்க்க வேண்டிய முதல் படமாக எஜமான் இருக்க வேண்டும். 

tamil cinema

வெள்ளித்திரையில் அழியா கதை படைத்துவிட்டு, எனது நெஞ்சத்தில் எஜமான் வானவராயனை நிறுத்திவிட்ட திரு. உதயகுமாருக்கு வைர கிரீடம் தான் சூட்ட வேண்டும். இக்கதையால் பல எஜமான்கள் உருவாகுவது நிச்சயம். பல வைத்தீஸ்வரிகள் கண்ணீர் சிந்தாமல் மகிழ்ச்சியாக வாழ்வது உறுதி" என தெரிவிக்கப்ட்டுள்ளது.