#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
96 படத்தில் சிறுவயது ராமாக நடித்த நடிகர் ஆதித்யாவின் தந்தை இந்த பிரபல நடிகரா! வைரலாகும் புகைப்படம்.
அறிமுக இயக்குனரான பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் தான் 96. இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக நடிகை திரிஷாவும் நடித்துள்ளார்.
இப்படம் அழகான காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தது.
இப்படத்திற்கு அசுரவதம் ,சீதக்காதி,உரியடி 2 போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கர் நடித்திருப்பார். இவர் பிரபல நடிகர் எம். எஸ். பாஸ்கர் என்பவரின் மகன் ஆவர்.
தற்போது ஆதித்யாவின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இவரின் மகன் தான் இவரா என வியந்து வருகின்றனர்.