#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதன் முறையாக தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட ஆலியா மானசா.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து வருபவர் தான் செம்பா என்ற ஆல்யா மானசா.
இந்த தொடருக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மானஸ் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
தற்போது ஆலியா ராஜா ராணி சீரியலில் நடித்துவரும் சஞ்சீவ் என்பவரை காதலித்து வருகிறார்.
இப்பொழுது ஆலியா சீரியலை தாண்டி நிகழ்ச்சிகள் செல்வது, விளம்பரங்கள் நடிப்பது என பிஸியாக இருக்கிறார். எப்போதும் தனது காதலன் சஞ்சீவுடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிடும் அவர் சிறு வயது புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் போட்டுள்ளார்.
அதைப்பார்த்து ரசிகர்கள் சிறு வயதிலும் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று வியந்து வருகின்றனர்.