#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட! தன்னிடம் சீறும் அனிதாவுக்கு ஆரி கொடுத்த பரிசு! அதுவும் என்ன எழுதியுள்ளார் பார்த்தீர்களா! யாரும் பார்த்திராத வீடியோ இதோ!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 80 நாளை கடந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெறியேறினார். மேலும் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் அனிதா,ஆரி, ஷிவானி, கேப்ரில்லா, ஆஜித் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும் கடந்த வாரம் முழுவதும் ஆரி மற்றும் அனிதாவிற்கு இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது .
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. போட்டியாளர்கள் அனைவருக்கும் பிக்பாஸ் பரிசுப்பொருட்கள் வழங்கினார். மேலும் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பரிசளித்து கொண்டனர். இந்நிலையில் அனிதா ஆரிக்கு துணி துவைக்கும் பிரஷ் மற்றும் காது குடையும் பட்ஸ்ஸை பரிசாக அனுப்பி இருந்தார்.
மேலும் அதற்கு துணியில் இருக்கும் கறைகளை நாம் பிரஷ் வைத்து தேய்க்கும் போது போய்விடும். அதேபோல நான் காயப்படுத்தி இருந்தால் அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் தேய்த்து அழித்துவிடுங்கள், அதேபோல பட்ஸ் வைத்து காதுக்குள் மேலோட்டமாக சுத்தம் செய்தால் பிரச்சினை இல்லை ஆனால் காதுக்குள் விட்டு துடைத்தால் பாதிப்பு ஏற்படும். எனவே நான் செய்த எந்த விஷயத்தையும் மனதில் ஆழமாக எடுத்துக்கொள்ளாமல் மேலோட்டமாக துடைத்து மறந்து விடுங்கள் என கூறியிருந்தார்.
Such a cute return gift by #Aari bro to Anitha. Such a good soul you are Aari bro ❤️. Respect. Watever others show doesn’t matter, give back kindness n love . #Aari #Aariarjunan #BiggBossTamil4 @Suzaay2 @SumathiSelvar12 @Biggyboss25 pic.twitter.com/ghKjhnEcwI
— Nivan (@ray_Nivan) December 26, 2020
அதனை இத்தொடர்ந்து ஆரி அனிதாவிற்கு பரிசளித்துள்ளார். ஒரு வாசனை திரவியத்தையும் ஒரு மணி மாலை ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். மேலும் ஒரு பேப்பரில் BB4 டைட்டில் வின்னர் அன்பு தங்கச்சி என்று எழுதி பரிசு பெட்டியில் போட்டு அந்த பெட்டிக்கு மேல் கன்னுகுட்டி என எழுதியிருக்கிறார். அந்த unseen வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.