#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனது உடலை வருத்தி கொண்டு ரசிகர்களை கவர நடிகர் ஆர்யா செய்த விஷயம்! வைரலாகும் வீடியோ.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம்வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க குத்து சண்டையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் என கூறப்படுகிறது. இப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடும் உடற்பயிற்சிகள் எல்லாம் எடுத்து வருகிறார்.
சமீபத்தில் கூட இவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போது எடுத்த புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது மிகவும் கடுமையாக தனது உடலை வருத்தி உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா பதிவிட்டுள்ளார்.
Sometimes u need to push Harder for Greater Results 💪💪💪#PaRanjithFilm #Arya30 #Prelook #Preplook #chennaiMMA #SanthoshMaster @beemji @K9Studioz pic.twitter.com/2dHZMRYiap
— Arya (@arya_offl) March 2, 2020