#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதை பார்க்கும் போது எனக்கு மிகவும் வலியை உண்டாக்குகிறது! நடிகர் ஆர்யாவுக்கு அவரது மனைவி போட்ட ட்வீட்!
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. முதல் படமே இவருக்கு பெரும் புகழை தேடி தந்தது. அதனை தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
மேலும் சாயிஷா நடிகர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. பின்னர் இருவரும் அவர்களது காதலை ஒப்புக்கொண்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு மிகவும் கோலாகலமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
தற்போது ஆர்யா தனது புதிய படத்திற்காக மிகவும் கடினமான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூட அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒர்அவுட் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த அவரது மனைவி சாயிஷா தற்போது பதிலடியாக ட்விட்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதாவது இது எனக்கு மிகவும் வலியை தருகிறது. மிக கடினமான ஒர்கவுட் என்று பதிவிட்டிருந்தார். மேலும் பெருமையான மனைவி என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
It hurts just looking at you hubzy!! Too much hardwork! #proudwife 🔥🔥😘😘😘😘 https://t.co/OWGW1jt9ZS
— Sayyeshaa (@sayyeshaa) March 2, 2020