கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நான் பிக்பாஸில் கலந்துகொள்கிறேனா? உண்மையை போட்டுடைத்த பிரபல வாரிசு நடிகர்!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசன் விரைவில் தொடங்கப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் நான்காவது சீசன் ப்ரோமோ வீடியோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
மேலும் அதில் கேப்ரியலா, ரியா ராஜ், அனு மோகன், ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி , ஷாலு ஷம்மு ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்தில் கமலின் மகள் அக்ஷராஹாசனுக்கு ஜோடியாக நடித்தவரும்,நடிகர் நாசரின் மகனுமான அபிஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் அதற்கு அபி ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.