#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் 63 படத்தளத்தில் நேர்ந்த விபரீதம்.! பெரும் சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர்!!
விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.
மேலும் விஜய் 63 படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் இதன் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படவேலைகள் நடைபெற்று வருகிறது.
அதனால் படப்பிடிப்பு தளத்தில் 100 அடி உயரத்தில் கிரேனில் ஃபோக்கஸ் லைட் தொங்கவிடப்பட்டிருந்தது. திடீரென அந்த லைட் கீழே விழுந்தததில், அங்கிருந்த தொழிலாளி செல்வராஜ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் படக்குழுவிற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.