#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக நுழைந்த பிரபல நடிகர்! ஏன்? என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்த நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் எத்தகைய டாஸ்க்காக இருந்தாலும் திறமையாக செய்து வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டும் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் துவக்கத்தில் பிக்பாஸ் போட்டியாளர் அனைவரையும் நாமினேட் செய்து, அதிலிருந்து தப்பிக்க வித்தியாசமான டாஸ்க்குகளையும் கொடுத்து வந்தார். அதில் சிறப்பாக விளையாடி சிபி, நிரூப், தாமரை, அமீர், சஞ்சீவ் ஆகியோர் நாமினேஷனிலிருந்து தப்பினர்.
அவர்களை தொடர்ந்து அக்ஷரா, வருண், பாவனி, பிரியங்கா, அபினய் ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்தனர். இந்த நிலையில் அவர்களில் அபினய் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் அன்பறிவு படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதால் அதன் ப்ரோமோஷனிற்காக நடிகர் ஆதி அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.