பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திருமணத்திற்கு பிறகு நடிகை சாயிஷா ஆர்யாவிடம் இப்படி ஒரு மாற்றமா; வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவின் திருமணம் எப்போது என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கேட்டுவந்த நிலையில் கடந்த மார்ச்.10 ஆம் தேதி நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.
ஆர்யாவின் திருமணம் சென்னையில்தான் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திருமணம் ஹைதராபாத்தில் ஏற்பட்டு செய்யப்பட்டது. மணமகன், மணமகள் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
இஸ்லாமிய முறைப்படி நடந்த ஆர்யா – சாயிஷாவின் திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
இதையடுத்து, இருவரும் தேனிலவிற்கு சென்று வந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். இந்த நிலையில், தற்போது சாயிஷா கழுத்தில் மஞ்சள் நிற தாலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.