பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மாதாமாதம் சன்னி லியோனுக்கு மகளிர் உதவி தொகை ரூ.1000.! கணவர் யார் தெரியுமா.?!
மகளிர் உதவி தொகை
ஒவ்வொரு மாதமும் சட்டீஸ்கர் மாநிலத்தில் திருமணமான குடும்ப பெண்களுக்கு மகளிர் உதவித் தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகின்றது. பாஜக அரசின் சார்பில் தான் இந்த உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பெண்கள் பயனுற்று வருகின்றனர்.
கணவரான ஜானி சின்ஸ்
இத்தகைய நிலையில், இதில் பயனடையும் நபர்கள் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இந்த மகளிர் உதவித் தொகையை பெறுவதாகவும், அவரது கணவர் ஜானி சின்ஸ் என்றும் குறிப்பிடப்பட்ட ஒரு விபரத்தை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: மர்ம உறுப்பில் மிளகாய்ப்பொடி திணித்து, சூடு போட்ட மாமனார் & மாமியார்.! பகீர் காரணம்.!
மோசடியில் லோக்கல் நபர்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது யார் என்பதை விசாரித்ததில் பாஸ்டர் மாவட்டம் தளூர் கிராமத்தில் வசிக்கும் வீரேந்திர ஜோஷி என்பவர் தான் இப்படி ஒரு மோசடியில் ஈடுபட்டார் என்பது தெரிய வந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
இதனை தொடர்ந்து பாஸ்டர் மாவட்ட ஆட்சியர் ஹரீஷ் இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், இதுவரை வங்கி கணக்குக்கு உதவித்தொகை கொடுக்கப்பட்ட நிலையில் அது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனைவிக்கு திருமண ஏற்பாடு செய்த கணவன்.. 12 ஆண்டுக்கு பின் நடந்த ருசிகர நிகழ்வு.!