கொரோனாவால் பாதிக்கப்பட்ட அடுத்த நடிகர்! தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!



actor-and-producer-venkat-tested-corono-positive

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது இரண்டாவது அலையாக கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நிரம்பி வழிகின்றனர். அதுமட்டுமின்றி இந்த கொடூர தொற்றுக்கு இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை உயிரிழக்கும் அவலமும் நேருகிறது.

இந்த நிலையில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ள, பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Venkat
இந்த தகவலை அம்மா கிரியேஷன்ஸ் சிவா மிகவும் உருக்கமாக, எனது 36  வருட நண்பன் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் மீண்டு வர அனைவரும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் ரசிகர்களை பெரும் வருத்தமடைய வைத்துள்ளது.