பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என் மகன்தானானு சந்தேகம்! அதான்.. நடிகர் அப்பாஸ் செய்த காரியத்தால் செம ஷாக்கான ரசிகர்கள்!!
கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல்தேசம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். இவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் விஐபி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூவேலி, படையப்பா, மின்னலே, சுயம்வரம், மலபார் போலீஸ் என பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் அப்பாஸ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் வெளிநாட்டிற்கு சென்று செட்டிலானார். மேலும் குடும்பத்தை காப்பாற்ற அங்கு அவர் தான் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் அப்பாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்து பேசியிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் கூறியதாவது, நான் சிறுவயதில் ஏகப்பட்ட சேட்டைகள் மற்றும் கலாட்டாக்களை செய்துள்ளேன். ஆனால் எனது மூத்தமகன் மிகவும் அமைதியாக இருப்பார். அதனால் அவன் எனது மகன்தானா என எனக்கு ஆச்சரியமாகவும், சந்தேகமாகவும் இருந்தது. நான் டிஎன்ஏ டெஸ்ட்டும் எடுத்து பார்த்தேன். டெஸ்டில் எனது மகன்தான் என கூறினார்கள் என்று கூறியுள்ளார். நடிகர் அப்பாஸ் பேசியதைக் கேட்ட ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.