#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சேரிலயா பிறந்தா? எப்படி பேசுறா பாருங்க.. மனைவியை ஏமாற்றி சேரி மக்களை இழிவுபடுத்திய சீரியல் நடிகர் அர்னவ்.. கொந்தளிப்பில் மக்கள்..!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவை ரகசிய திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் திவ்யா கர்ப்பமாக இருப்பதாக இருவரும் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இவர்களுக்குள் எழுந்த பிரச்சனையால் தன்னை மதம் மாற்றி திருமணம்செய்து ஏமாற்றி கைவிட்டதாக அவர் மீது, திவ்ய ஸ்ரீ பரபரப்பு புகாரளித்தார்.
மேலும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து பேசிய அர்னவ் என்ற முகமது நயனார், தங்களின் திருமண புகைப்படத்தை விளம்பரசூட்டிங்காக எடுத்தது என்ற நோக்கில் பேச சொல்லியிருந்த ஆடியோவும் வெளியாகி இருந்தது. இதற்கிடையில் அருண் பேட்டியளிக்கும் போது, "எனது மனைவி கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதியாகி உள்ளார் என்று தகவல் கிடைத்தது.
நான் அவர்களிடம் கேட்ட சமயத்தில், நீதான் அவரை தள்ளிவிட்டாய், அதனால் ரத்தம் வந்துள்ளதாக புகார் வந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். எனது குழந்தையை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அவ்வாறு செய்திருக்கிறார். திவ்யாவுக்கு பின்னால் ஈஸ்வர் என்பவர் இருக்கிறார். நாங்கள் கடந்த ஐந்து வருடமாக காதலித்து வந்தோம்.
அவர் தனக்கு குழந்தை இருப்பதை என்னிடம் தெரிவிக்கவில்லை. அவருக்கு 6 வயதில் குழந்தை இருக்கிறது. அதனை எனது அக்காவின் குழந்தை என்று பலமுறை கூறி ஏமாற்றியிருந்தார். காதலால் அனைத்தையும் சகித்து நான் வாழ்ந்தேன். நான் அவரை பிரிந்து வாழும் எண்ணத்தில் இல்லை.
அவர் அதிகமாக கெட்ட வார்த்தைகளை பேசுகிறார். நான் சேரியில் இருந்து வந்தேனா?, அவர் சேரியில் இருந்து வந்தாரா? என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு மோசமாக பேசுகிறார்" என்று கூறினார். இதில் சேரி குறித்து அவர் பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தவே, சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.