பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிரபல சன் டிவி சீரியலில் இருந்து விலகிய முக்கிய ஹீரோ! அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!!
சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் சன் டிவி தொடர்கள் என்றாலே மக்களிடம் பெரும் ஆதரவு இருக்கும். அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பூவே உனக்காக. கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த தொடர் வெற்றிகரமாக 250 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் ஹீரோவாக கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அருண். அவர் தற்போது பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகி விட்டதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகியுள்ளதை உங்களுக்கு தெரியபடுத்த எண்ணுகிறேன். இனி என்னை கதிராக உங்களால் பார்க்க முடியாது.
இப்படியொரு வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் சன் டிவிக்கு எனது மனமுருகிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தொடர்ந்து எனக்கு அன்பும் ஆதரவும் கொடுத்து வந்த ரசிகர்களுக்கு நன்றி. உங்களது ஆதரவு இல்லாமல் நான் இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது, கவலைப்படாதீர்கள் விரைவில் ஒரு நல்ல செய்தியுடன் உங்களை சந்திப்பேன். உங்களின் அன்பும் ஆதரவும் எனக்கு எப்போதும் தேவை. என்றும் உங்கள் அன்புடன் அருண் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு பூவே உனக்காக தொடரிலிருந்து கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த லிவிங்ஸ்டன் மகள் ஜோவிகா விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.