பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்னதான் புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும் பொதுவெளியில் இப்பிடியா பண்ணுவது... லீக்காகிய நடிகர் ஆர்யா புகைப்படம்.!?
தமிழ் சினிமாவின் சர்ச்சைகளின் மன்னன், சாக்லேட் பாய், பிளே பாய் என்று பல பெயர்களில் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் தான் நடிகர் ஆர்யா. தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகரான ஆர்யா 2005ஆம் வருடம் வெளியான 'அறிந்தும் அறியாமலும்' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆர்யா, தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், இரண்டாம் உலகம், ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டார். நடிகர் ஆர்யாவிற்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2018ஆம் வருடம் கலர் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் ஆர்யா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியினால் பல சர்ச்சைகள் கிளம்பியது. இதனை எல்லாம் உதறி தள்ளிய சர்ச்சை மன்னன் ஆர்யா, தனது நீண்ட நாள் காதலியான மற்றுமொரு நடிகையான சாயிசாவை திருமணம் செய்து கொண்டார்.
2019ஆம் வருடம் இவர்களது திருமணம் நடைபெற்று புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ரசிகர்களின் மத்தியில் தீயாய் பரவியது இவர்களின் திருமண புகைப்படம். இதன்பின் சமீபத்தில் நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிசா முத்தமிட்டு கொள்வது போல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.