பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
போலீஸ் எஸ்.ஐ எனது மனைவிக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கிறார்! தாடி பாலாஜி அளித்த புகார்!
நடிகர் தாடி பாலாஜிக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நித்யா தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடிவெடுத்ததோடு மட்டுமல்லாமல் அதற்காக பாலாஜி ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்றும் நித்யா கண்டிஷன் போட்டார்.
இதையடுத்து சமீபத்தில் நித்யா காவல்நிலையத்தில் பாலாஜி தன்னையும், தனது மகளையும் மிரட்டுவதாகவும், குடித்துவிட்டு நண்பர்களுடன் வந்து கதவு, ஜன்னல்களை உடைத்து தொல்லை கொடுப்பதாகவும், செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நடிகர் பாலாஜி தனது வழக்கறிஞருடன் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என்பவர் மீது நடிகர் பாலாஜி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் மனோஜ்குமார் தனக்கும், தனது குடும்பத்திற்கும் தொல்லை கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக இன்று மனோஜ் குமார் மற்றும் பாலாஜி ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தாடி பாலாஜி, காவல்துறையை சேர்ந்த மனோஜ் குமாருக்கு பணி நீக்கமோ அல்லது பதவி உயர்வு தடை செய்யக்கூடிய அளவிற்கு தண்டனையோ கொடுக்க வேண்டும். என் மனைவிக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வருகிறார். இதனால் நாங்கள் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.