#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் விஜய்க்கு புது பட்டம். இனி இளைய தளபதி இல்லை. "மக்களின் நாயகன்"!
தமிழ் சினிமாவில் ஒவொரு நடிகர்களுக்கு முன்னாடியும் ஒரு இணை பெயர் உண்டு. சூப்பர் ஸ்டார், உலக நாயகன், அல்டிமேட் ஸ்டார் என பல பெயர்கள் உண்டு. நடிகர் விஜய்க்கு இளையதளபதி என்ற பெயர் உண்டு.
விஜய் ரசிகர்கள் அனைவரும் விஜயை இளைய தளபதி என்றுதான் அழைப்பார்கள். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு புதிய பெயர் ஒன்றை வைத்துள்ளார் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ்.
இதுவரை 400 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் டெல்லி கணேஷ், நடிகர் விஜய்யுடன் “தமிழன், வேட்டைக்காரன்,காவலன் ” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் டெல்லி கணேஷிடம், நடிகர் விஜய் பற்றி கேள்வி கேட்டபட்டது.
அப்போது பேசியுள்ள டெல்லி கணேஷ், அவர் கஷ்டப்பட்டு தான் சினிமாவில் வளர்ந்தார். முதலில் நடனம் மூலமாக மக்களை கவர்ந்து பின் நடிப்பு மூலம் கவர்ந்தார் . விஜய்,இளைய தளபதி என்பதை விட அவர் “மக்களின் நாயகன்” அவரது படங்களில் மக்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் என்ன வேண்டுமோ அதை தான் காட்டுவர் என்று கூறியுள்ளார். நடிகர் டெல்லி கணேஷ், நடிகர் விஜயை மக்களின் நாயகன் என்று கொடுத்துள்ள பட்டமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துபோய்யுள்ளது.