#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாஜகவில் இணைந்த பிரபல பாட்ஷா பட நடிகர்! தீயாய் பரவும் புகைப்படம்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நாகர்கோவிலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதற்கு முன்பு அவர் கேரளா திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பிரபல நடிகரான தேவன் பாஜக கட்சியில் இணைந்துள்ளார்.
நடிகர் தேவன் தமிழில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பாட்ஷா படத்தில் ஹீரோயினின் அப்பாவாக, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதுமட்டுமின்றி அவர் ஏராளமான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்திலும் இவர் முன்னணி நடிகராக உள்ளார். இந்தநிலையில் பாஜகவில் இணைந்த நடிகர் தேவனை வரவேற்ற அமித்ஷா பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கி வாழ்த்தியுள்ளார்.