#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து குடும்பத்துடன் கொண்டாடிய தமிழ் நடிகர்.. கவனத்தை ஈர்க்கும் வீடியோ.!!
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஜெயம் ரவி. கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமான ரவி, அப்படத்தில் தனது அருமையான நடிப்பின் மூலம் பின்னாளில் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து எம்.குமரன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், மிருதன், டிக் டிக் டிக், கோமாளி, பொன்னியின் செல்வன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
Wishing everyone a joyful and Merry Christmas filled with warmth, love, and cherished moments🎄🎅🎉 pic.twitter.com/iXNXWG5cYZ
— Jayam Ravi (@actor_jayamravi) December 25, 2023
2024-ம் ஆண்டு இவரின் காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாக உள்ளது. இவர் கடந்த 2004-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றவர். கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்று பெண்மணியை திருமணம் செய்த ஜெயம் ரவி, தற்போது தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயம் ரவி குடும்பத்துடன் தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் அவர் தனது குடும்பத்துடன் இணைந்து தன் கையால் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்த வீடியோவும் கவனத்தை ஈர்த்துள்ளது.