பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஓவராக ஸீன் போட்ட கரண்.. கிடைத்த கேப்பில் கிடா வெட்டிய விக்ரம்.. பாலா படத்தில் நடந்த டிவிஸ்ட்.!
கரணின் தவறான முடிவு :
நிறைய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த கரணுக்கு சில படங்களில் கதாநாயகனாக நடிக்கின்ற வாய்ப்புகள் கூட கிடைத்தது. ஆனால், அவர் கதைகளை சரிவர தேர்வு செய்யாமல் விட்டதால் அவர் தனது கேரியரை இழந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கரண் குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.
தமிழ் சினிமாவை கலங்கடித்த திரைப்படம் :
அதில், "பாலா இயக்குனராக அறிமுகமான சேது திரைப்படம் தமிழ் சினிமாவையே கலங்கடித்தது என்றால் மிகையாகாது. அந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது கரண் தானாம். ஆனால் அந்த படத்தில் நடிப்பதற்கு கரண் அதிகப்படியான சம்பளம் கேட்டதால் பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க முடியாது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விக்ரமின் அதிர்ஷ்டம் :
இதனால், அந்த படத்தில் இருந்து கரணை விலக்கிவிட்டு விக்ரமினை நடிக்க வைத்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பின்னர் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. இந்த படம் 100 நாட்கள் வரை தியேட்டரில் ஓடியது. இந்த படத்தை கரண் மிஸ் பண்ணாமல் நடித்து இருந்தால் அவருக்கு விக்ரமை போலவே நல்ல கேரியர் அமைந்திருக்கும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.