குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அசுரன் படத்தில் களமிறங்கும் நடிகர் கருணாஸின் மகன்; தந்தையைப் போல் சாதிப்பாரா?
நடிகர் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் நடிகர் கருணாஸின் மகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
‘வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் மீண்டும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது .
கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
மேலும், இப்படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகரும் சிறந்த குணச்சித்திர நடிகருமான நடிகர் கருணாஸின் மகன் நடிக்க உள்ளார். அதாவது படத்தில் நடிகர் தனுஷின் சிறுவயது தோற்றத்தில் கருணாஸின் மகன் கென் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.