கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தம்பதியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த தளபதி விஜய்.!



Actor Vijay Celebrate Pongal 2025 with Keerthi Suresh Antony 

உலகத்தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் பொங்கல் 2025 பண்டிகை களைகட்டி இருக்கிறது. போகிப்பண்டிகையைத் தொடர்ந்து, இன்று பொங்கல் பண்டிகை சிறப்பிக்கப்பட்டது. மாட்டுப்பொங்கல் நாளை கொண்டாடப்படுகிறது.

இதனிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. உலகளவில் வெவ்வேறு நாடுகளில் இருந்து பணியாற்றி வரும் தமிழர்களும், பொங்கல் பண்டிகையை சிறப்பித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Retro: பெட்டியுடன் கேங்காக புறப்பட்ட சூர்யா; ரெட்ரோ படக்குழு வெளியிட்ட பொங்கல் கிளிக்ஸ்.!

இந்நிலையில், தி ரூட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் விஜய் பொங்கல் 2025 பண்டிகையை சிறப்பித்தார். இந்த நிகழ்வில் நடிகை கீர்த்தி சுரேஷ், அவரின் கணவரான தொழிலதிபர் ஆண்டனி ஆகியோரும் கலந்துகொண்டு இருந்தனர். 

தி ரூட் தயாரிப்பு நிறுவனம் மகாராஜா திரைப்படத்தை இயக்கி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: துபாய் மண்ணில் சாதித்த அஜித்; 500 பேருக்கு அன்னதானம் கொடுத்த ரசிகர்கள்.!