"ஜெயலலிதா மாதிரி வரணும்.ஆனா.?" வரலட்சுமி சரத்குமாரின் நச் பேட்டி.!



Actress Varalakshmi sarathkumar Press meet about politics arrival

"பிரபல நடிகை வரலட்சுமி எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்." என்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என்றாலே ஒரு காலகட்டத்தில் மிகப் பிரபலம். சினிமாவில் நிறைய ரசிகர்களை பெற்ற அவர், அதன் பின் அரசியலில் கால் பதித்தார். சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை நடத்தி வந்த அவர், அதனை பாஜகவுடன் இணைந்தார். இந்த நிலையில், அவரது மகளான வரலட்சுமி சரத்குமார் தனது பேட்டியில் தனது அரசியல் வருகை குறித்து தெரிவித்து இருக்கிறார்.

varalakshmi

மதகஜராஜா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் வரலட்சுமி பேசிய போது, அவரிடம் "எதிர்காலத்தில் நீங்கள் உங்கள் தந்தையைப் போலவே அரசியலுக்கு வருவீர்களா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சுவாரசியமாக பதிலளித்த வரலட்சுமி, " நிச்சயமாக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்பொழுது தான் அரசியலில் மாற்றம் ஏற்படும். ஜெயலலிதா தான் என்னுடைய ரோல் மாடல். அவர் உண்மையில் ஒரு இரும்பு பெண்மணி. அவர் போல முதலில் சினிமாவில் நான் சாதிக்க வேண்டும். அதன் பின் அரசியலில் கால் பதிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற மதகஜராஜா படத்தின் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!

இதையும் படிங்க: ஒளியும் வழியும் பிறக்கட்டும் - நடிகை இந்துஜாவின் பொங்கல் 2025 வாழ்த்து.!