பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#HBDமம்மூட்டி : 71 வயசுலயும் இளமை மாறாத முகம்.. நம்ம மலையாள சூப்பர்ஸ்டார் பிறந்த நாள் இன்று..! குவியும் வாழ்த்துகள்
பிரபல மலையாள திரைப்பட நடிகர் மம்மூட்டிக்கு இன்று பிறந்தநாள் ஆகும்.
முகமது குட்டி என்ற இயற்பெயரை கொண்ட நடிகர் மம்முட்டி, மலையாள திரையுலகின் முக்கிய ஸ்டார்களில் முதன்மையானவர் ஆவார். திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தை கொண்டவர்.
மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி உட்பட பலமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை கடந்த 1998 ஆம் வருடத்திலேயே பெற்றிருந்தார். தனது வாழ்நாட்களில் முன்னணி நடிகர்களுடன் தனது படமும் என மொத்தமாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி 1951ம் வருடம் பிறந்த நடிகர் மம்மூட்டிக்கு இன்று வயது 71. இன்று அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வாழ் நாட்களில் மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது, நான்கு முறை மாநில விருது, 8 பிலிம்பேர் விருது, பத்மஸ்ரீ போன்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். எளிமையான குணம் கொண்ட மம்மூட்டி மனிதநேயம் மிக்க மனிதராகவும் இருக்கிறார். தமிழில் இவரின் மௌனம் சம்மதம், அழகன், தளபதி, மறுமலர்ச்சி படங்கள் மிகவும் பிரபலமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகு பெருமை கொண்ட நாயகனை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.