விஜய் மாறவே இல்லை., அப்படியே இருக்கிறார் - தளபதி விஜய்க்கு புகழாரம் சூட்டிய நடிகர் மனோபாலா.. இதுதான் காரணமா?..! வைரலாக ட்வீட்..!!



actor manobala meet thalapathy vijay

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் தளபதி விஜய். இவர் நடித்த பல படங்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்த நிலையில், சமீபத்தில் வெளியான இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் அந்தளவு வரவேற்பு பெறவில்லை என்று கூற வேண்டும். 

தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அத்துடன் வாரிசு படத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் அவ்வப்போது கசிந்த வண்ணம் உள்ளது.

thalapathy vijay

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை நேரில் சந்தித்த மனோபாலா, "விஜய்யை ஷூட்டிங்கில் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. பழைய விஜய் மாறவே இல்லை. அதே எனர்ஜியுடன் அப்படியே இருக்கிறார். அவருடனான 15 நிமிட பேச்சு எனக்கு புத்துணர்ச்சியை தந்தது" என்று டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.