#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#அதிர்ச்சி மரணம் : நடிகர் மாரிமுத்து இன்று காலை உயிரிழப்பு.!
இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து தனது 57 வயதில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் தான் மாரிமுத்து. இவர் நிறைய படங்களில் பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி பலதரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக நடிக்கும் மாரிமுத்து வில்லனாக இருந்தாலும் தனது வித்தியாசமான ஈர்க்கும் விதமான நடிப்பால் நிறைய ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தவர்.
குணசேகரன் என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த அவர் இன்று காலை 08:30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர்.