#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஐயோ..அது நானில்லை! காமெடி நடிகர் மயில்சாமி வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ஏன்? எதனால் தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கி அவர்களை போலவே பிற பிரபலங்களுக்கு செய்திகளை பகிர்வது, தெரிந்தவர்களுக்கு தவறான வழியில் குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இதனால் பல குழப்பங்களும், சர்ச்சைகளும் எழுகிறது.
சமீபத்தில் கூட யோகிபாபு, அதுல்யா, சிபிராஜ் போன்ற பல பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு பரபரப்பானது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காமெடி நடிகர் மயில்சாமி பெயரில் போலியான டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு தவறான வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தனது கவனத்திற்கு வந்த நிலையில் நடிகர் மயில்சாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், எனக்கு ட்விட்டரில் எந்த கணக்கும் இல்லை. எனது பெயரில் இருக்கும் கணக்கு போலியானவை. அதற்கு எந்த வகையிலும் நான் பொறுப்பில்லை. அதனை யாரும் பின் தொடரவேண்டாம் என அறிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.