மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உயிரிழப்பதற்கு முன் கடைசி ஆசையை கூறிய மயில்சாமி... ரஜினி அளித்த வாக்குறுதி..!?
கோலிவுட் திரையுலகில் நகைச்சுவை நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. இவர் மேடை கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நாடகக் கலைஞர் என பன்முக திறமைகளையுடையவர். மேலும் சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார்.
1984 ஆம் ஆண்டு 'தாவணிக் கனவுகள்' திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்தார். இதனை தொடர்ந்து கன்னி ராசி, என் தங்கச்சி படிச்சவ, அபூர்வ சகோதரர்கள் என தொடங்கி பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
1984ஆம் ஆண்டு தொடங்கிய இவரது திரைப்பயணம், கடந்த வருடம் ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படம் வரை இவரது நடிப்பின் பங்களிப்பு இருந்தது. இவரின் நகைச்சுவைக்காகவே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் மயில்சாமி உயிரிழந்த செய்தி தமிழ் திரையுலகில் கலக்கத்தை ஏற்படுத்தியது. பல நடிகர், நடிகைகள் இவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளனர். மேலும் இவரின் இறுதி ஆசையாக மேகநாதீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கத்திற்கு, ரஜினி பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதனை கண்டிப்பாக செய்வேன் என்று இறுதிச்சடங்கிற்கு ரஜினி வாக்குறுதி அளித்துள்ளார்.