பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிறந்தநாள்தான் அதற்காக இப்படியா? பிரபல வில்லன் நடிகர் வெளியிட்ட புகைப்படத்தால் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா போன்ற படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் மிலிந்த் சோமன். இவர் பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 53 வயது நிறைந்த அவர் 29 வயது நிறைந்த சங்கீதா என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி பேசுப்பொருளானது.
மேலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் இந்த வயதிலும் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மிலிந்த் சோமன் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்காக அவர் தனது மனைவி மற்றும் அம்மாவுடன் கோவா சென்றுள்ளார்.
மேலும் அங்கு தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வரும் அவர் தனது பிறந்த நாளையொட்டி கடற்கரையில் நிர்வாணமாக ஓடும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, அதில் ஹேப்பி பர்த்டே டூ யூ என பதிவிட்டுள்ளார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.