#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாய்ப்புக்காக தெருத்தெருவா அலைந்தேன்., டூத் பேஸ்ட் கம்பெனில... - சினிமா வாழ்க்கையை விளக்கிய எம்.எஸ்.பாஸ்கர்..!!
தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், மாதவன், தனுஷ், ஜெயம் ரவி, சந்தானம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.
இவர் தனியார் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் நல்ல நடிகராக வரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்படி? எப்போது? வந்தது என்பது எனக்கு தெரியவில்லை. நல்ல நடிகர் என்று பெயர் எடுக்க நான் கடுமையாக உழைத்தேன். இப்போதும் உழைத்துக்கொண்டு இருக்கிறேன்.
தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன். மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நான் நடித்தாலும் தனித்தன்மையோடு நான் தனியாக தெரியவேண்டும் என்று கதை எனக்கு சொல்லப்படும்போதே மனதிற்குள் அந்த கதாபாத்திரத்தை கற்பனை செய்து கொள்வேன்.
படப்பிடிப்பு தளத்தில் தேவையின்றி யாரிடமும் பேசவும் மாட்டேன். செல்போனையும் பார்க்க மாட்டேன். இயக்குனர் என்னிடம் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக நான் நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். டூத் பேஸ்ட் கம்பெனியில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது சினிமாவில் நடிக்க வேண்டும் என பலரிடம் வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறேன்.
இயக்குனர்களை சந்தித்து வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் அவர்கள் பார்க்கலாம் என்று தான் கூறுவார்கள். எனக்குள் இருந்த வெறி என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது. என் நண்பர் மூலமாக சின்னபாப்பா பெரியபாப்பாவில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
சன் தொலைக்காட்சியை நான் எப்போதும் மறக்கமாட்டேன். சீரியலில் நடிக்க மீண்டும் வாய்ப்பு வந்தால் நான் கட்டாயம் நடிப்பேன். தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் சட்டகுற்றங்களை களைய கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்" என்று பேசினார்.