#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் டிவியின் பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகர் பிரஜன்! இனி அவருக்கு பதிலாக நடிக்கப்போவது யார் தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வரும் தொடர் வைதேகி காத்திருந்தாள். இந்த தொடரில் பிரஜன் ஹீரோவாகவும், சரண்யா கதாநாயகியாகவும் நடித்து வந்தனர்.
இந்த தொடர் ஆரம்பமாகி ஒரு சில வாரங்களே ஆன நிலையில் சினிமா படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதாலும், சீரியல்களுக்கு தேதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படுவதாலும் பிரஜன் வைதேகி காத்திருந்தாள் தொடரில் இருந்து விலகினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகர் பிரஜனுக்கு பதிலாக, விஜய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் முன்னா நடிக்கவுள்ளார். அவர் இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜபார்வை ஆகிய சீரியல்களில் முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னா வைதேகி காத்திருந்தாள்
படப்பிடிப்பில் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.