#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் அமெரிக்காவில் செட்டிலாக இதுதான் காரணம்.! உண்மையை உடைத்த நடிகர் நெப்போலியன்! பாராட்டும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிகர் நெப்போலியன் ஹீரோ, வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்கள் என தமிழில் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் நெப்போலியன் தமிழ் மட்டுமின்றி ஹாலிவுட் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் அரசியலிலும் களமிறங்கி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். நடிகர் நெப்போலியனின் மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். நடிகர் நெப்போலியனின் முதல் மகன் தசைவளக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாராம்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நெப்போலியன், தான் அமெரிக்காவில் செட்டிலானததற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கு ஏற்ப குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பும், தந்தையின் வழிகாட்டுதலும் இருந்தால் அது நல்வழியில் செல்லும்.
நான் மட்டுமில்லை, அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளின் டீன்ஏஜ் வயதில் அவர்களுடன் கூட இருந்து கவனித்து கொள்ள வேண்டும். நான் எனது இரு மகன்களும் 3, 5 வயது என சிறுவயதாக இருக்கும்போது ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்தேன். பின் டீன் ஏஜ் வயது வந்தவுடன் அவர்களை கவனிக்கும் பொறுப்பு எனக்கு அதிகமாகி விட்டது. அதனால்தான் நான் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டேன் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.