பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பிரபு.! ஏன்? அவருக்கு என்னாச்சு? வெளிவந்த தகவல்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக , சகாப்தமாக கொடிகட்டி பறந்தவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். இவரது மகன் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட், குடும்ப திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். கொழுகொழுவென இருக்கும் நடிகர் பிரபுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இவருக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா பிரபு என இரு பிள்ளைகள் உள்ளனர். விக்ரம் பிரபு தமிழில் சில திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகிறார். மேலும் நடிகர் பிரபுவும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் பிரபு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது அவர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பிரபுக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாம். மேலும் தற்போது நடிகர் பிரபு நலமாக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.