#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வைதேகி காத்திருந்தாள் தொடரில் இருந்து விலகிய நடிகர் பிரஜன்! இதுதான் காரணமா?? ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி ஏராளமான சீரியல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒரு எபிசோடை கூட தவற விடாமல் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.
அவ்வாறு அண்மையில் தொடங்கி மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் வைதேகி காத்திருந்தாள். இந்த தொடரில் பிரஜன் முக்கிய ஹீரோவாகவும், சரண்யா கதாநாயகியாகவும் நடித்து வந்தனர். இந்த தொடர் ஆரம்பமாகி சில வாரங்களே ஆன நிலையில் தற்போது நடிகர் பிரஜன் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதற்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பிய நிலையில் நடிகர் பிரஜன், தான் சினிமா படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருப்பதாகவும், அதனால் சீரியலுக்கு தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாலும் அவர் தொடரில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார். தனது சிரமத்தை விளக்கி சீரியல் நிர்வாகத்துடன் சுமூகமாகப் பேசியே தொடரிலிருந்து விலகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.