"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
73 வயதிலும் குறையாத எனர்ஜி.! இந்திய சினிமாவையே கட்டிஆளும் நடிகர் ரஜினியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா???
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்த அவர் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் தனது அசாத்திய நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
பின்னர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்த இவருக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். சூப்பர் ஸ்டாராக கொடிகட்டு பறக்கும் ரஜினிகாந்த் இன்று வரை தனது எனர்ஜி குறையாமல், செம ஸ்டைலாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் தலைவர் 170, தலைவர் 171 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள், என பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினியின் சொத்து விவரம் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது அவருக்கு 40 கோடி மதிப்பில் போயஸ் கார்டனில் ஒரு பெரிய பங்களா, விலையுயர்ந்த சொகுசு கார்கள், படத்திற்கு படம் கோடி கணக்கில் சம்பளம் என ஒட்டுமொத்தமாக 480 முதல் 500 கோடி ரூபாய் வரை சொத்து இருக்கும் என தகவல்கள் பரவி வருகிறது.