"கள்ளிப்பால் கொடுத்து கொன்னுட்டாங்க" - இயக்குனர் டிஜே ஞானவேல் வேதனை.. காரணம் என்ன?



DirECTOR TJ Gnanavel opens up about the reason for Vettaiyan failure 

ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், பகத் பாசில் உட்பட பலர் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் வேட்டையன். லைகா ப்ரொடெக்சன் தயாரிப்பில், அனிரூத் இசையில் உருவான திரைப்படம், கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிய வேட்டையன், எதிர்பார்த்த வசூலை சந்திக்காமல் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. 

குறிப்பாக படத்தின் மேக்கிங், இயக்கம் போன்ற பல விஷயங்களில் விமர்சனத்தை எதிர்கொண்டது. படத்தின் தோல்வி டிஜே ஞானவேல் தரப்புக்கு மிகுந்த அதிர்ச்சி தந்தது. இதுகுறித்த அவர் கருத்துக்கள் ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். ஆனால், கங்குவா படம் விமர்சனத்தை எதிர்கொண்டு, அதற்கு ஜோதிகா தொடங்கி வைத்த பதில் கருத்து, அடுத்தடுத்து பலரையும் கருத்து தெரிவிக்க வைத்தது.

விமர்சனம் பார்த்து வருகிறார்கள்

தனது படத்தின் தோல்வி குறித்து பேசிய டிஜே ஞானவேல், "ஒரு விமர்சனத்திற்கு என நோக்கம் இருக்க வேண்டும். எந்த நோக்கத்தின் அடிப்படையில் விமர்சனம் வைக்கப்படுகிறது என்பது முக்கியம். வேட்டையன் திரைப்படம் வெளியாகும் முன்பாகவே, படம் தோல்வி என வந்துவிட்டது. பலரும் இன்று விமர்சனம் பார்த்து படம் பார்க்க வருகிறார்கள். 

இதையும் படிங்க: 'துணியில்லாம நடுரோட்ல நின்னேன்.' சித்தப்பு சரவணனின் மோசமான அனுபவம்.. கண்ணீர் விட்ட நடிகர்.!

கள்ளிப்பால் கொடுத்துட்டாங்க

படம் தோல்வி என வந்தபின் படத்தை பார்த்தால், அதனை மாற்றும் சக்தி படத்தை பார்த்தாலும் இருக்காது. இந்த விஷயத்தை நான் கள்ளிப்பால் கொடுப்பதாக கருதுகிறேன். எனது படத்திற்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவிட்டனர். நீங்கள் விரும்பாத நபர் படத்தை எடுத்திருந்தால், நடித்தால் உடனே கள்ளிப்பால் ஊற்றும் தன்மை அதிகரித்துவிட்டது. 

உழைப்பு வீணாகிறது

படம் வெளியாகும் முன்பு DISASTER எனப்படும் ஹாஷ்டேக் வருவது கண்டித்தக்கத்தக்கது. இவர்களின் படத்தை காலி செய்ய வேண்டும் என கருத்து மேலோங்கி இருக்கிறது. எனது கருத்துக்கு எதிர்ப்பு கருத்து தெரிவிப்பவர்கள், கட்டாயம் அதனை செய்வார்கள். இந்த படத்திற்காக ஒவ்வொரு கலைஞரும் உழைத்துள்ளனர். பல ஆண்டுகளாய் வாய்ப்புக்காக காத்திருந்து வேலை செய்கிறார்கள். அப்படம் தோல்வி அடையும்போது, அவர்களின் உழைப்பும் வீணாகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: " அண்ணனை சைட் அடிப்பியா என கேட்ட தோழிகள்" சூர்யாவின் தங்கை கூறிய உண்மை சம்பவம்.!?