ஜெப்ரி அடித்ததால் வலியில் துடித்த ராணவ் மருத்துவமனையில் அனுமதி.! கையில் கட்டு.! ரெட் கார்டு கன்பார்ம்.!!



  Bigg Boss Tamil Season 8 Raanav Admitted Hospital 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8, எந்த சீசனிலும் இல்லாத எதிர்ப்பு, விரக்தியை மக்களிடையே சந்தித்துள்ளது. இந்நிலையில், டாஸ்க் ஒன்றில் ஜெப்ரி, சௌந்தர்யா, ராணவ் ஆகியோர் விளையாடியபோது, ராணவ் கைகளில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறவே, அதனை சௌந்தர்யா பொருட்படுத்தவில்லை. ராணவ் நடிப்பதாக கூறினார்.

ஆனால், சில நொடிகள் கடந்தும் ராணவ் கதறியதால், அருண் விரைந்து சென்று ராணவை மீட்டு சென்றார். ராணவ் குறித்து போட்டியாளர்கள் பேசிக்கொண்டு இருந்தபோதே, அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டதாக பிக் பாஸ் கூறினார். 

இதனால் போட்டியாளர்கள் அதிர்ந்துபோன நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் வந்த ராணவ், 3 வாரகாலம் தன்னை மருத்துவர்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியதாக கூறுகிறார். 

இதையும் படிங்க: "கதவை திறக்குறேன் வந்துருங்க" - பிக்பாஸ் 8 கோவா குழுவுக்கு விஜய் சேதுபதி எச்சரிக்கை.! 

போட்டியாளர்களின் சௌந்தர்யா மட்டும் தனது கருத்தில் இருந்து பின்வாங்காமல் பேசுவதால், அவரின் மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே போட்டியாளர்கள் சண்டையிட்டால் ரெட் கார்ட் வழங்கப்படும் என தொகுப்பாளர் விஜய் சேதுபதி எச்சரித்த நிலையில், தற்போது போட்டியாளரின் கைகளில் காயம் ஏற்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: சிவந்த கண்கள்.. விஜய் சேதுபதியை காண்டாக்கிய பவித்ரா; எதிர்ப்புக்குரலில் நெட்டிசன்கள்.!