#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரோஜா சீரியலில் இணைந்த புதிய பிரபலம்! அதுவும் யாருக்கு பதிலாக பார்த்தீர்களா! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தற்போது மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் தொடர்களில் ஒன்றாக இருப்பது ரோஜா சீரியல். இத்தொடர் கடந்த சில வாரங்களாக மிகவும் விறுவிறுப்பாகவும், அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கதாநாயகியான ரோஜா எப்பொழுது அவரது அம்மா செண்பகத்தை சந்திப்பார் என எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் நிலவி வந்தது.
இந்தநிலையில் கடந்த வாரம் பழைய விஷயங்களை மறந்த நிலையில் செண்பகம் மகள் மற்றும் குடும்பத்துடன் இணைந்துள்ளார். அவருக்கு பழைய விஷயங்களை ஞாபகப்படுத்த குடும்பத்தினர் போராடி வருகின்றனர். இவ்வாறு சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் ரோஜா தொடரில் அஸ்வின் கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கட் ரங்கநாதன் நடித்து வந்தார்.
அவர் தற்போது சில காரணங்களால் ரோஜா சீரியல் விட்டு விலகுவதாக அறிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என பல கேள்விகள் எழுந்து வந்தநிலையில் புதிய அஸ்வினாக கோகுலத்தில் சீதை, வானத்தைப்போல போன்று தொடரில் நடித்து வரும் சன்கரேஷ் நடிக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.