#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னாச்சு நடிகர் சந்தானத்துக்கு? அவரின் தோற்றத்தை கண்டு ஷாக் ஆன ரசிகர்கள்! புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் சந்தானம். இவரது காமெடியில் வெளியான பல படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. ஓகே ஓகே, பாஸ் என்ற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற நடிகர் சந்தானமும் ஒரு காரணம்.
சமீப காலமாக நகைச்சுவை நடிகராக நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார் சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தும்விட்டார் சந்தானம்.
தற்போது தில்லுக்கு துட்டு 2 படத்தை தயாரித்து, அதில் ஹீரோவாக நடித்தும் உள்ளார் நடிகர் சந்தானம். இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்ட நடிகர் சந்தானத்தை பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
அதற்கு காரணம் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார் நடிகர் சந்தானம். மேலும், விழாவில் பேசிய அவர் தயாரிப்பாளராக மாறினால் இப்படித்தான் உடல் எடை கூட போய்விடும் என கூறியது அனைவர்க்குக்கும் அதிர்ச்சியாக இருந்தது.