#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சந்தானமா? ரவி தேஜாவா?.. ஒருகனம் ஆடிப்போன ரசிகர்கள்.!
காமெடி சூப்பர் ஸ்டாராக தமிழ் திரையுலகில் ஜொலித்து வந்த நடிகர் சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இதனால் தமிழ் திரை உலகில் காமெடிக்கு ஏற்பட்ட பஞ்சம் இன்று வரை மிகப்பெரிய வெற்றிடத்தை கொண்டுள்ளது.
அந்த வெற்றிடம் சந்தானத்திற்காக அப்படியே காத்திருக்கிறது. சந்தானத்தை தொடர்ந்து பல காமெடி நட்சத்திரங்கள் திரையுலகில் அறிமுகமானாலும், சந்தானத்தின் இடம் என்பது யாராலும் நிரப்பப்படவில்லை.
அவரது படங்களில் காமெடி நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து திரையரங்குக்கு செல்லும் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். அவரின் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், டிக்கிலோனா, ஏ1 உட்பட ஒரு சில படங்கள் மட்டுமே நல்ல ரசிக்கும்படியான காமெடியை கொண்டிருந்தது.
சமீபத்தில் வெளியான 80ஸ் பில்டப் திரைப்படமும் எதிர்பார்த்த அளவு காமெடியை கொண்டிருக்கவில்லை. இந்நிலையில், டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகியுடன் மீண்டும் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் சந்தானம் இணைந்திருந்தார்.
இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தின் போட்டோ ஒன்றை சந்தானம் பதிவிட்ட நிலையில், அதனைப் பார்த்த பலரும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா என சந்தானத்தை மாற்றி நினைத்தனர். அதன் பின்னரே அது சந்தானம் தான் என்பதை உறுதி செய்தனர்.