#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் சந்தானம் தனது செல்ல மகளுடன் செய்த டப்மாஸ்; வைரலாகும் வீடியோ.!
தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைச்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியில் நடித்து வந்த சந்தானம் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
ஒவொரு நிகழ்ச்சியிலும் தனது திறமையை நிரூபித்த அவர் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்குள் காலடி வைத்தார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னராக வலம் வந்த சந்தானம் சமீபகாலமாக கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான 'தில்லுக்கு துட்டு' இரண்டாம் பாகம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது 'அக்கியூஸ்ட் நம்பர் 1 'என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சந்தானம் அவருடைய செல்ல மகளுடன் சேர்ந்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி', படத்தில் பேசிய காமெடி வசனந்த்தை, மகளுடன் டப்மேஷ் செய்து இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பல ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரசிகர்கள் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சர்யப்பட்டு போகிறார்கள்.