#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எங்கேயும் எப்போதும் பட ஹீரோவுக்கு திருமணமா? பொண்ணு இவர்தானா? வெளியான புதிய தகவல்!
தமிழ் சினிமாவில் எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சர்வானந்த். இவர் இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றார்.
மேலும் நடிகர் சர்வானந்த் தமிழில் காதல்னா சும்மா இல்லை, நாளை நமதே, சேரன் இயக்கிய ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழில் விஜய்சேதுபதி மற்றும் திரிஷா நடித்து வெற்றிபெற்ற 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் தற்போது 2 படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 36 வயதாகும் நடிகர் சர்வானந்துக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சர்வானந்த் தனது சிறுவயது தோழியை காதலித்து வந்ததாகவும் , சம்மதம் தெரிவித்த நிலையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண் தற்போது தொழிலதிபராக உள்ளாராம். இந்நிலையில் அவர்களது திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.