பெண் வேடமணிந்து தாயாக மாறிய நடிகர் சதீஷ்..!! அவரே வெளியிட்ட புகைப்படம்..!! என்ன காரணம் தெரியுமா.?



actor-sathish

தூங்கி கண் விழித்த குழந்தை அம்மா எங்க என்று கேட்காமல் இருக்க, அம்மா வேடம் போல் சேலை அணிந்து குழந்தை அழுகையை நிறுத்துவது போல புகைப்படத்தை பதிவு செய்த காமெடி நடிகர்.

சதீஷ் என்பவர் இந்தியத் திரைப்படத் துறை நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திக்கேயனுடன் எதிர்நீச்சல் படத்தில் நடித்துப் புகழ்பெற்றார். இவர் தாண்டவம், எதிர் நீச்சல், மான் கராத்தே, சிகரம் தொடு, மெரினா உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர், டிவிட்டர் பக்கத்தில் தனது குழந்தைக்காக அம்மா வேடம் போட்டு, "அம்மா வெளியே சென்றிருக்கும் போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்து அம்மா வேண்டும் என்று அடம் பிடிக்கும் போதெல்லாம் இனிமேல் அம்மா எங்க என்று கேப்ப "என்று குறிப்பிட்டு , சமூக வலை தளத்தில் பெண் வேடத்தில் உள்ள புகைப்படத்தை சேர்த்து பதிவு செய்துள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் டேக் செய்து வருகிறார்கள்.