"காலேஜ் காதல் வேண்டாம்" எல்லோரும் அதில் மட்டும் கவனமாக இருங்க - நடிகர் சதீஷ் அட்வைஸ்.!



Actor Sathish Advice to College Students 

 

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில், வெற்றியாளர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் நடிகர் சதீஷ் கலந்து கொண்டார். 

அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "கல்லூரிகளில் படிக்கும் நேரத்தில் கட் அடித்து கொள்ளலாம், பிட் அடித்தும் பாஸ் ஆகலாம். ஆனால் காதலில் மட்டும் விழுந்து விடக்கூடாது. 

இந்த காலம் உங்களுக்கு நன்றாக படிக்கக்கூடிய காலம் என்பதால், படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். எனது வாழ்க்கையில் தற்போது வரை நான் மதுவை குடித்து இல்லை, புகை பிடித்தது கிடையாது. 

திரைத்துறையில் உழைத்து முன்னேறி வருகிறேன். ஒரு முன்னுதாரணமாக உங்கள் முன்பு நான் இங்கு நிற்கிறேன்" என தெரிவித்தார்.